
செய்திகள் இந்தியா
ஏர் இந்தியா விமான விபத்து: காப்பீடு ரூ.2,400 கோடி
புது டெல்லி:
அகமதாபாத் விமான விபத்துக்கு ரூ.2,400 கோடிக்கும் அதிகமான காப்பீடு தொகை பதிவாகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமான விழுந்து நொறுங்கியதில் 241 பயணிகளும், 5 மருத்துவ மாணவர்களும் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இதுவரையில் இல்லாத அளவுக்கு இந்த சம்பவத்துக்கு ரூ.2400 கோடி வரையில் இன்சூரன்ஸ் கிளைம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் நியூ இண்டியா அஷ்யூரன்ஸ் மற்றும் டாடா ஏஐஜி நிறுவனங்களில் காப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
விமானத்தின் வயது, தரத்தின் அடிப்படையில் காப்பீடு தொகை வழங்கப்படும். ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.2,400 கோடி வரை காப்பீடு தொகை கிடைக்கும்.
இதில் விமான விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பத்துக்கு குறைந்தபட்சம் ரூ.1.26 கோடி இழ்பபீடு வழங்க வேண்டும்.
ஆன்லைனில் விமான டிக்கெட்களில் காப்பீடு சேவை பெற்ற பயணிகளுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி வரை கூடுதல் காப்பீடு தொகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am