
செய்திகள் இந்தியா
என் தந்தையை மீட்டுக் கொடுத்தால் நான் தருகிறேன் 2 கோடி ரூபாய்: ஏர் இந்தியா விபத்தில் உயிரிழந்தவரின் மகள்
குஜராத்:
தன் தந்தையை உயிருடன் மீட்டுக் கொடுத்தால் தான் 2 கோடி ரூபாய் தர தயார் என்று அஹமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவரின் மகள், Falguni பேசும் காணொலி பார்ப்பவர்களின் இதயங்களை ரணமக்கியுள்ளன.
உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்புனர்களுக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு தருவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் அதற்கு Falguni பதிலளித்துள்ளார்.
1 கோடி ரூபாய்க்குப் பதில் தாம் இரண்டு கோடி கொடுக்க தயார். அவர்களால் என் தந்தையை உயிருடன் மீட்டுத் தர முடியுமா என்று அழுதுக் கொண்டே கேட்டும் காணொலி சமூக ஊடகத்தில் பொது மக்களை வேதனையடைய செய்துள்ளது..
தன் அம்மா உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் அவருக்கு தன் தந்தையின் துணை தேவை என்றும் Falguni குறிப்பிட்டார்.
தனக்கு அவரது அன்பும் பாசமும் தேவை என்றும் அதை உங்களின் 1 கோடி ரூபாய் நிதியால் கொடுக்க முடியுமா என்று அவர் கேட்பது கண்களைக் குளமாக்கின.
தந்தையின் உடலை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனைக்காக இரத்த மாதிரியை வழங்க வந்த போது Falguni கூறிய வார்த்தைகள் அவரின் வலியை வெளிப்படுத்தியுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am