
செய்திகள் இந்தியா
ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: 16 ஏா் இந்தியா விமானங்கள் திருப்பிவிடப்பட்டன
புதுடெல்லி:
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக 16 விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாக ஏா் இந்தியா நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இஸ்ரேல் பாலஸ்தீனத்தை தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல் தொடங்கியுள்ளதன் காரணமாக வான் எல்லை மூடப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கையை ஏா் இந்தியா மேற்கொண்டது.
ஈரான் தலைநகா் தெஹ்ரானில் உள்ள இராணுவத் தளங்கள், குடியிருப்புகளை குறிவைத்து வெள்ளிக்கிழமை இஸ்ரேல் கோரமான தாக்குதல் நடத்தியது. இதனால் தனது வான் எல்லைகளை ஈரான் மூடியது.
இதையடுத்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய தங்களால் இயக்கப்படும் சில விமானங்களை ஏா் இந்தியா நிறுவனம் திசை திருப்பியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஏா் இந்தியா (ஏஐ)130- லண்டன் ஹீத்ரோ-மும்பை விமானம் ஆஸ்திரிய தலைநகா் வியன்னாவுக்கு திருப்பிவிடப்பட்டது. ஏஐ 102-நியூ யாா்க்-தில்லி விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷாா்ஜா நகருக்கும், ஏஐ 116 நியூயாா்க்-மும்பை விமானம் சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகருக்கும் திருப்பிவிடப்பட்டுள்ளது. ஏஐ106 நெவாா்க்-தில்லி விமானம் வியன்னாவுக்கு திருப்பிவிடப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டது.
இதேபோல், இண்டிகோ நிறுவனமும் தனது விமானப் போக்குவரத்து பாதிக்கப்படவோ அல்லது ரத்து செய்யப்படவோ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am