நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூடுதல் உத்தரவு தொடர்பில் நஜிப்பிற்கு முதல் வெற்றி: அவரின் விண்ணப்பம் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்

புத்ராஜெயா:

சட்டத்துறை தலைவரின் மேல்முறையீட்டை நிராகரித்து கூட்டரசு நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் வீட்டுக் காவல் உத்தரவுக்கான மனு உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.

தலைமை நீதிபதி ஹஸ்னா முகமது ஹாஷிம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட குழு,

கூடுதல் உத்தரவு இருப்பதாக சட்டத்துறை தலைவர் வாதிட்டாலும், அதன் இருப்பு தானாகவே உத்தரவை செல்லுபடியாக்கவில்லை என்று கண்டறிந்தது.

அனுமதி வழங்கப்பட்டால் மட்டுமே கூடுதல் உத்தரவின் செல்லுபடியை முழு விசாரணையில் தீர்மானிக்க முடியும் என்று அவர்கள் கூறினர்.

இந்த கட்டத்தில் கூடுதல் உத்தரவு உள்ளது.  அதன் நிலை, செல்லுபடியாகுமா இல்லையா, முழு விசாரணையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.

இந்த கட்டத்தில் இந்த விஷயத்தில் எந்தக் கருத்தையும் தெரிவிப்பது பொருத்தமானது அல்லது நியாயமானது என்று நாங்கள் கருதவில்லை என்று இன்று குழுவின் முடிவை வாசித்த நீதிபதி ஜபரியா முகமது யூசோப் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset