நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாராவின் பள்ளி தலைமையாசிரியர், மாணவர் பிரிவு ஆசிரியர், வார்டன் ஆகியோர் சபா கல்வி இலாகாவிற்கு இடம் மாற்றப்பட்டனர்

கோத்தா கினபாலு:

ஷாராவின் பள்ளி தலைமையாசிரியர், மாணவர் பிரிவு ஆசிரியர், வார்டன் ஆகியோர் சபா கல்வி இலாகாவிற்கு இடம் மாற்றப்பட்டனர்.

கல்வியமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை உறுதிப்படுத்தியது.

துன் டத்து முஸ்தபா இடை நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர், மாணவர் விவகாரங்களுக்கான மூத்த உதவியாளர், அனைத்து வார்டன்களையும் சபா மாநில கல்வித் துறைக்கு தற்காலிகமாக  மாற்றப்பட்டனர்.

பள்ளி மாணவி ஷாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான விசாரணையை புக்கிட் அமான் சிறப்புப் பணிக்குழு ஏற்றுக்கொண்டதாக போலிஸ் துறை அறிவித்தது.

இதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கல்வியமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

மேலும் விசாரணை விரிவாகவும், முழுமையாகவும், முழுமையாகவும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்கு கல்வியமைச்சு அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset