நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரின் ஆதரவாளர்கள் கூட்டரசு நீதிமன்ற வளாகத்தில் கூடினர்

புத்ராஜெயா:

நஜிப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரின் ஆதரவாளர்கள் கூட்டரசு நீதிமன்ற வளாகத்தில் கூடினர்.

இன்று காலை சுமார் 8.30 மணியளவில் நீதிமன்றத்திற்கு வந்த நஜிப் ரசாக்கை ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வரவேற்றனர்.

குறிப்பாக முன்னாள் பிரதமரான போஸ்கூவை விடுதலை செய்க என்று அவர்கள் கோஷமிட்டனர்.

காலை 6 மணிக்கே வந்த ஆதரவாளர்களுடன் முன்னாள் சட்ட அமைச்சர் சைட் இப்ராஹிம், அம்னோ பொதுச் செயலாளர் அஸ்ராஃப் வஜ்டி துசுகி, இளைஞர் தலைவர் டாக்டர் அக்மல் சலே மற்றும் உச்ச செயற்குழு உறுப்பினர் மஹ்த்சிர் காலித் ஆகியோரும் இணைந்தனர்.

வீட்டுக் காவல் உத்தரவை அமல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நீதி மறுஆய்வு நடவடிக்கைகளைத் தொடர நஜிப்பிற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து அட்டர்னி ஜெனரல் மேல்முறையீடு செய்ய முடியுமா என்பது குறித்து கூட்டரசு நீதிமன்றம் இன்று தனது முடிவை வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset