நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

20,000 தோட்டத் தொழிலாளர்களின் நலன் காக்கும் சட்டத்தை அமல்படுத்துவதால் அரசுக்கு என்ன பாதிப்பு?: அருட்செல்வன்

கோலாலம்பூர்:

20,000 தோட்டத் தொழிலாளர்களின் நலனை காக்கும் வகையிலான சட்டத்தை அமல்படுத்துவதால் அரசுக்கு என்ன பாதிப்பு ஏற்படப் போகிறது.

தோட்ட சமூக ஆதரவு குழுவின் ஆலோசகர் அருட்செல்வன் இக்கேள்வியை எழுப்பினார்.

தோட்டத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்கள் ஒரு காலக்கட்டத்தில் அத்தோட்டங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

வெளியேறும் போது அவர்களுக்கு வீடுகள் வழங்குவதில்லை. இதனால் வீடுகள் இல்லாமல் பல இன்னல்களை அவர்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக வீடுகள் இல்லாமல் மக்கள் போராடி வருவதை நாம் பார்த்துக் கொண்டு தான் உள்ளோம். இதன் அடிப்படையில் தான் தோட்ட சமூக ஆதரவு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் கீழ் பல நிபுணர்களை கொண்டு தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுரிமைச் சட்டத்தை நாங்களே உருவாக்கி விட்டோம்.

தோட்ட மக்களை காக்க சட்டங்களை இயற்ற வேண்டும் என நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். அதற்கு எந்த பலனும் இல்லை என்பதால் இந்த சட்டத்தை நாங்களை உருவாக்கி விட்டோம்.

ஆகவே இந்த சட்டத்தை மத்திய அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் தான் அச்சட்டத்துடன் நாங்கம் இன்று நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளோம். எங்களுடன் 100 தோட்டங்களின் பிரதிநிதிகள் வந்துள்ளது.

தற்போதைய கணக்கெடுப்பின் அடிப்படையில் நாட்டில் இருப்பதே 20 ஆயிரம் தோட்ட தொழிலாளர்கள் தான்.

அவர்களின் நலனை காக்கும் வகையில் இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதால அரசுக்கு என்ன பாதிப்பு என்று எனக்கு தெரியவில்லை.

ஆகவே இந்த விவகாரத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அருட்செல்வன் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset