நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

50 ஆண்டுகளாக தோட்டப் பாட்டாளிகள் ஏமாற்றப்படுகிறார்கள்: டாக்டர் ஜெயகுமார் வேதனை

கோலாலம்பூர்:

இந்த நாட்டில் உள்ள தோட்டப் பாட்டாளிகள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.

பிஎஸ்எம் கட்சி தலைவர் டாக்டர் ஜெயக்குமார் இதனை தெரிவித்தார்.

கடந்த 1974ஆம் ஆண்டு துன் ரசாக் தோட்டப் பாட்டாளிகளுக்கு அதன் தோட்ட நிறுவனங்கள் வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும்.

ஆனால் 50 ஆண்டுகளுக்கு மேலாக கடந்தும் தோட்டப் பாட்டாளிகளுக்கு வீடுகள் இல்லை.

நாங்களும் பலமுறை நாடாளுமன்றம் வந்து எத்தனையோ மகஜர்களை கொடுத்து விட்டோம்.

ஆனால் தோட்ட பாட்டாளிகளுக்கு வீடு அமைப்பு திட்டம் உருவாக்கப்படவில்லை.

அரசாங்கத்துக்கு உதவும் வகையில் நாங்களே வீட்டுரிமை சட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த வீட்டுரிமை சட்டத்தை பயன்படுத்தி தோட்டப்புறங்களில் உள்ள பாட்டாளிகளுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்த அரசாங்கம் முன் வர வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset