
செய்திகள் இந்தியா
12.06 ராசியான எண்: குஜராத் முன்னாள் முதல்வரின் கடைசி விமானப் பயணம்
குஜராத்:
குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ருபானி தனக்கு பிடித்த தேதியில் மரணமடைந்திருப்பது பலரை ஆச்சிரியப்படுத்தியுள்ளது.
நேற்று நிகழ்ந்த அஹமதாபாத் விமான விபத்தில் விஜய் ருபானி உட்பட 241 பேரும் மாண்டனர்.
இந்நிலையில், விஜய் ருபானிக்குப் பிடித்த 12' 6 என்ற தேதியில் பயணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
12, 6 ஆகிய இரு எண்களும் விஜய் ருபானியின் ராசியான எண்கள் என்று கூறப்படுகின்றன.
ராசி, நாள், நட்சத்திரம் ஆகியவற்றின் மீது அதீத நம்பிக்கை கொண்ட விஜய் ருபானி தான் வாங்கிய கார்கள் மற்றும் மோட்டார் சைக்களுக்கும் '1206' என்ற எண்களில் வாகன பதிவெண்ணைப் பதிவு செய்துள்ளார். ,
இதன் காரணமாக ஜூன் 12ஆம் தேதி விமானத்தில் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு விஜய் ருபானி முன் பதிவு செய்திருக்கக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விமானத்தில் அவர் அமர்ந்த இருக்கையின் எண் 12 என்ற தகவலும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அவர் மதியம் 12.10 மணிக்கு விமானத்திற்குள் செல்வதற்கான போர்டிங் பாஸைப் பெற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
தான் முன்னெடுக்கும் அனைத்து விவகாரங்களிலும் ராசியான '12' மற்றும் '6' எண்களை கடைப்பிடித்தவருக்கு கடைசியில் அதே ராசி எண்களினால் மரணம் ஏற்பட்டு இருப்பது மிகவும் ஆச்சிரியப்படுத்தக்கூடிய தற்செயலாக அமைந்துள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am