
செய்திகள் இந்தியா
அஹமதாபாத் விமான விபத்து: வானத்தில் முடிந்த கனவுப் பயணம் – ஒரு குடும்பத்தின் சோகமயமான முடிவு
குஜராத்:
லண்டனில் புதிய வாழ்க்கையைத் தொடங்க பல கனவுகளுடன் புறப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர், நேற்று நிகழ்ந்த அஹமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் எண்ணத்தையும், மனதையும் வேரோடு நடுங்க வைத்துள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்த மென்பொறியியலாளர் பிரதிக் ஜோஷி, அவரது மனைவி மருத்துவர் கோமி வ்யாஸ், அவர்களது எட்டு வயது மகளும், ஐந்து வயது இரட்டைக் குழந்தைகளும் ஒரே நேரத்தில் உயிர் துறந்தார்கள்.
புறப்பாட்டுக்கு முன் அவர்கள் எடுத்துக் கொண்ட கடைசி குடும்ப நிழல்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி, ஒவ்வொரு பார்வையையும் கண்ணீராக்குகிறது.
சிரித்த முகங்கள்… கனவுகளோடு வாழும் சிறு கைகளின் பிடிகள்… இப்போது நினைவுகளாக மட்டும் மீதமிருக்கின்றன.
பிரதிக் ஜோஷி கடந்த ஆறு ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்தார். தன் மனைவி, பிள்ளைகள் ஆகியோரை தன்னோடு அழைத்துச் செல்ல விரும்பியதாலே இந்தியா வந்திருந்தார்.
மருத்துவரான கோமி வ்யாஸ், இந்தப் பயணத்திற்கு இரு நாட்களுக்கு முன்புதான் உதைப்பூர் மருத்துவமனையின் தனது பணியை நிறைவு செய்திருந்தார்.
இப்போது அவர்களின் மரணச் செய்தி, நண்பர்கள் மற்றும் உறவினர்களை மட்டுமல்லாமல், இந்தச் செய்தியை வாசிக்கிற ஒவ்வொருவரையும் வலி கொண்ட சுமையுடன் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு குடும்பத்தின் கனவுகள்… ஒரே விபத்தில் சிதைந்தன.
வானத்தில் தொடங்கிய அவர்களது பயணம்… சிறிது நேரத்திற்குள் நிலத்தில் முடிவடைந்தது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am