
செய்திகள் இந்தியா
விமானம் புறப்பட்ட 30 வினாடிகளுக்குப் பிறகு, ஒரு பெரிய சத்தம் கேட்டது: உயிர் பிழைத்த விஸ்வாஸ் தகவல்
குஜராத்:
அஹமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் விஸ்வாஸ் குமார் என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.
விமானத்தில் 11ஏ இருக்கையில் பயணித்த பிரிட்டீஷ் குடியுரிமை பெற்ற விஸ்வாஸ் குமார், எமர்ஜென்ஸி எக்ஸிட் எனப்படும் அவசர கால வழி மூலம் கீழே குதித்து காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக கூறியுள்ளார்.
அவருக்கு மார்பு, கால், கண் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குப் பிறகு விஸ்வாஸ் குமார் நடந்து செல்லும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
40 வயதான விஸ்வாஸ் குமார் மனைவி குழந்தைகளுடன் 20 வருடங்களாக லண்டனில் வசித்து வருகிறார்.
விமானம் புறப்பட்ட 30 வினாடிகளுக்குப் பிறகு, ஒரு பெரிய சத்தம் கேட்டது, பின்னர் விமானம் விபத்துக்குள்ளானது என்று அவர் குறிப்பிட்டார்.
தான் கண் விழித்தப் போது தன்னைச் சுற்றி உடல்களும் விமானத்தின் பாகங்களும் சிதறிக் கிடந்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஸ்வாஸ் குமார் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am