
செய்திகள் இந்தியா
அஹமதாபாத் விமான விபத்து மீட்பு பணிகள் நிறைவு: மரணம் 265 ஆக உயர்வு
குஜராத்:
இந்தியாவின் அஹமதாபாத் விமான விபத்து மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது.
iகுஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து நேற்று மதியம் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 டிரீம் லைனர் பயணிகள் விமானம் சில நிமிடங்களில் நொறுங்கி விழுந்து வெடித்தது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர்.
ஒருவர் மட்டும் அதிருஷ்டவசமாக கீழே குதித்து உயிர் தப்பியுள்ளார்.
விமானம் மருத்துவ கல்லூரி ஒன்றின் மீது விழுந்து வெடித்ததில் மருத்து கல்லூரி விடுதியில் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த 5 கல்லூரி மாணவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தீக்காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am