
செய்திகள் இந்தியா
ஏர் இந்தியா விமானம் எச்சரித்த MAYDAY call
புது டெல்லி:
குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே அவசர காலத்திற்கு அழைக்கப்படும் 'May day call' விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு விமான கட்டுப்பாட்டு நிலையத்திற்கு வந்துள்ளது. பதிலளிக்க கட்டுப்பாட்டு அறை முற்பட்டும் பலனளிக்கவி்ல்லை.
ஆனால் அடுத்த சில நொடிகளிலேயே விமானம் சுமார் 600 அடி உயரத்திலிருந்து தரையில் விழுந்து விபத்துக்கு உள்ளானது.
ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய ஏர்இந்தியா AI 171 விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களுக்குப் பிறகு வியாழக்கிழமை மதியம் 1:38 மணிக்கு மேகானி குடியிருப்பு பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
விமானத்தில் 232 பயணிகள் இருந்தனர். அதில் பெரியவர்கள் 230 பேர், விமான பணியாளர்கள் 10 பேர், விமானிகள் இருவர் என மொத்தம் 242 இருந்தனர் என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இந்த விமான விபத்தில் 204 பேர் இறந்துவிட்டனர் என்று முதல்கட்ட அறிவிப்பை நகர காவல்துறை கமிஷ்னர் ஜி எஸ் மலிக் தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am