
செய்திகள் இந்தியா
புறப்பட்ட 3 நிமிடங்களில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்: 242 பயணிகளின் நிலை என்ன?
அகமதாபாத்:
புறப்பட்ட 3 நிமிடங்களில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த 242 பயணிகள் நிலை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை.
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம் சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் 230 பயணிகள் இருந்தனர். அதே வேளையில் கேப்டன் உட்பட 12 அதிகாரிகள் விமானத்திக் இருந்தனர்.
விமானம் விழுந்து நொறுங்கியதில் கரும்புகை வெளியேறி வருகிறது.
இந்த விபத்து விமானம் புறப்படும் போது நிகழ்ந்ததாகவும், விபத்துக்குள்ளானது ஏர் இந்தியா விமானம் என்றும் கூறப்படுகிறது.
விமான விபத்தைத் தொடர்ந்து ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் நூற்றுக்கணக்கான பேர் மரணமடைந்திருக்கலாம் என ஊடக செய்திகள் கூறுகின்றன.
இருந்தாலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am