நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இணைய பகடிவதைக்கு ஈஷாவின் மரணம் இறுதியாக இருக்க வேண்டும்: பிரபாகரன்

கோலாலம்பூர்:

நாட்டில் இணைய பகடிவதைக்கு ஈஷாவின் மரணம் இறுதியாக இருக்க வேண்டும்.

மித்ரா சிறப்பு நடவடிக்கை குழுத் தலைவர் ப. பிரபாகரன் இதனை கூறினார்.

நாட்டில் இணைய பகடிவதையுடன் அச்சுறுத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதில் பள்ளி மாணவர்களுடன் வயதுக் குறைந்தவர்களும் அதிகம் சிக்கி தவிக்கின்றனர்.

குறிப்பாக பாலியல் ரீதியிலான பிரச்சினையிலும் அவர்கள் அதிகம் சிக்கிக் கொள்கின்றனர்.

இந்த இணைய பகடிவதையால் பாதிக்கப்பட்டு தான் ஈஷா என்ற பெண் மரணமடைந்தார்.

அவரின் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அது தொடர்பான சட்டமும் திருத்தம் செய்யப்பட்டது.

இப்படி இணைய பகடிவதைக்கு ஈஷாவில் மரணம் இறுதியானதாக இருக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் தான் தற்போது பள்ளி மாணவர்களுக்கான இணைய பாதுகாப்பு திட்டத்தை மித்ரா தொடங்கி உள்ளது.

இத்திட்டம் இணைய அச்சுறுத்தல் தொடர்பில் மாணவர்களுக்கு முழு விழிப்புணர்வை வழங்கும்.

ஆக இத்திட்டத்திற்கு பள்ளி நிர்வாகமும் பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என பிரபாகரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset