
செய்திகள் மலேசியா
புக்கிட் காயு ஹித்தாம் எல்லை வழியாக நாட்டிற்குள் வர முயன்ற எட்டு வெளிநாட்டினருக்கு நுழைவு மறுக்கப்பட்டது
அலோர் ஸ்டார்:
மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு நிறுவனம் (AKPS), பார்வையாளர்களாக நுழைவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யாத எட்டு வெளிநாட்டினருக்கு எதிராக நுழைவு மறுப்பு அறிவிப்பை (NPM) வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, இலங்கையைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட எட்டு நபர்கள் புக்கிட் காயு ஹித்தம் எல்லை சோதனைச் சாவடி வழியாக மலேசியாவிற்குள் நுழைய முயன்றதாக AKPS ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“மொத்தம், ஐந்து ஆண்களுக்கும் மூன்று பெண்களுக்கும் குடிவரவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 8(3) இன் படி NPM வழங்கப்பட்டது.
“அவர்கள் அனைவரும் எந்த வழியாக நாட்டிற்குள் நுழைய முயன்றார்களோ அதே வழியாக அந்தந்த நாடுகளுக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டது. மறுப்பு செயல்முறை நிலையான இயக்க நடைமுறைகள் (SOP), தற்போது நடைமுறையில் உள்ள துறையின் உத்தரவுகளின்படி இது மேற்கொள்ளப்பட்டது,” என்று அது கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 18, 2025, 2:34 pm
எதிரிகளின் கூச்சலைவிட உறுப்பினர்களின் மெளனம் ஆபத்தானது: டத்தோ ஸ்ரீ எம் சரவணன்
August 18, 2025, 11:35 am
சிலாங்கூரின் சில மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும்: மெட் மலேசியா
August 18, 2025, 10:53 am
ஜாரா கைரினாவின் மரணத்தை அரசியலுக்காகப் பயன்படுத்தாதீர்: பிரதமர் அன்வார் எச்சரிக்கை
August 17, 2025, 10:30 pm
தமிழ் மொழிக்கு இணையான மொழி ஏதும் இல்லை: முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் ஆ. ராசா
August 17, 2025, 7:02 pm