நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாரா கைரினாவின்  மரணத்தை அரசியலுக்காகப் பயன்படுத்தாதீர்: பிரதமர் அன்வார் எச்சரிக்கை 

புத்ராஜெயா:

ஜாரா கைரினா மகாதிர், வான் அஹமது ஃபாரிஸ் வான் அப்துல் ரஹ்மான் ஆகியோரின் மரணங்களை அரசியல் அல்லது தனிப்பட்ட நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவூட்டினார்.

பிரதமர் துறை மாதாந்திர கூட்டத்தில் பேசிய அவர், சம்பவங்களைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் ஊகங்களும் தவறான தகவல்களும் தேவையில்லாமல் பொதுமக்களின் அமைதியின்மையை அதிகரித்துள்ளன என்றார்.

“சமூக ஊடகங்கள், குறிப்பாக உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும்போது, தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க வேண்டும்.  சமூக ஊடகங்களில் பொதுமக்களின் உணர்வைக் கட்டுப்படுத்துவது கடினம் என்பதை அன்வார் ஒப்புக்கொண்டார்.

ஒரு நோயியல் நிபுணராக தம்மைக் காட்டிக் கொண்டு மில்லியன் கணக்கானவர்களை தவறாக வழிநடத்தி, குடும்பங்கள், நண்பர்கள், சக ஊழியர்களிடையே அச்சத்தைத் தூண்டிய சமீபத்திய வழக்கை அவர் மேற்கோள் காட்டினார்.

“ஒருவரின் மரணத்தை அரசியல் நோக்கங்களுக்காக நாம் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது அல்லது பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடாது” என்று அவர் மேலும் கூறினார்.

தீர்க்கப்படாத ஜாரா கைரினாவின் மரணத்திற்கு எதிராக, வார இறுதியில் நாடு தழுவிய அளவில் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி ஒற்றுமையைக் காட்டியதை அடுத்து இது நிகழ்ந்துள்ளது.

ஜூலை 16 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பாப்பாரில் உள்ள தனது பள்ளி விடுதிக்கு அருகிலுள்ள வடிகாலில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த நிலையில், ஜூலை 17 ஆம் தேதி சபாவின் கோட்டா கினாபாலுவில் உள்ள குயின் எலிசபெத் I மருத்துவமனையில் ஜாரா கைரினா இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.

அவரது மரணம் குறித்த விசாரணை இன்று சபாவில் உள்ள கோத்த கினாபாலு மரண விசாரணை நீதிமன்றத்தில் தொடங்குகிறது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset