
செய்திகள் மலேசியா
பிரதமரும் துணைப் பிரதமரும் 'செய்யனும்' என்று சொன்னதற்கு இப்போதுதான் அர்த்தம் விளங்குகிறது: டத்தோ ஸ்ரீ எம். சரவணன்
சிரம்பான்:
ம.இ.காவின் நெகரி செம்பிலான் மாநிலத்தின் 79 பேராளர் மாநாட்டை ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் தொடக்கி வைத்தார்.
சிறப்புரை ஆற்றிய அவர், இந்த ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்கும் போது ம.இ.காவின் தலைவர் டான் ஸ்ரீ.விக்னேஸ்வரன் ம.இ.காவுக்கு எத்தனை பதவி வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கவில்லை கோரவில்லை.
ஆனால் இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கும் கட்சி என்ற முறையில் ம.இ.காவிற்கு அவர்கள் அமைச்சரவையில் இடம் தந்திருக்க வேண்டும். அந்த கடமை அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும் என்றார்.
அந்த வகையில் ம.இ.கா பொறுமை காத்து இந்த அரசுக்கு ஆதரவு கொடுத்தது. அதன் பின் மாநில தேர்தல் நடந்த போது கண் துடைப்புக்கு ம.இ.கா எத்தனை இடத்தில் போட்டியிட விரும்புவதாக கடமைக்கு ஒரு பெயர் பட்டியலை கேட்டு, ரமணா படத்தில் வருவது போல் பரபரப்பை காட்டி இறுதியாக அவர்களே ஒரு முடிவை எடுத்துக்கொண்டனர். பிறகு இந்த முடிவுக்கு வருந்துகிறோம் என சொல்லி ம.இ.கா வெற்றிப்பெற்ற ஒரு சட்ட மன்றத்தில் மட்டுமே போட்டியிட சொன்னார்கள் அதுவும் இறுதி நேரத்தில்.
அப்போது ம.இ.கா அந்த தேர்தலை புறக்கணித்தது. உடனே ம.இ.கா அலுவலகத்தை தேடி வந்தார் பிரதமர். இந்த தேர்தலில் உங்கள் ஒத்துழைப்பு தேவை எனக்கு தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று பிரதமர் ம.இ.கா உறுப்பினர்கள் மத்தியில் சொன்னார்.
தேர்தல் முடிந்த பின் அவரும் அமைதியானார். அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்தது. அதிலும் ம.இ.கா அங்கம் வகிக்க வில்லை.
அதன் பின் ம.இ.கா.வின் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவிற்கு தேசிய முன்னணியின் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோ ஸ்ரீ ஸாஹித் ஹமிடி வருகை தந்தார். அப்போதும் இந்தியர்கள் விவகாரங்களை பேச அமைச்சரவையில் இந்திய பிரதிநிதி இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம்.
அவரும் சொன்னார். கவலை வேண்டாம், எனக்கு தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று. அப்போது இவர்கள் இருவரும் "செய்யனும்" என்று சொன்ன வார்த்தைக்கு இப்போது தான் அர்த்தமே புரிந்தது.
நல்லா செய்தார்கள் என்றார் டத்தோ ஸ்ரீ சரவணன்.
ம.இ.கா அதன் அரசியல் எதிர்காலத்தை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லவேண்டிய கட்டாயத்தை இவர்கள் உருவாக்கி விட்டனர்.
விரைவில் ம.இ.கா அதன் அடுத்த அரசியல் பயணத்திற்கான முடிவை எடுக்கும் என டத்தோ ஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 18, 2025, 2:34 pm
எதிரிகளின் கூச்சலைவிட உறுப்பினர்களின் மெளனம் ஆபத்தானது: டத்தோ ஸ்ரீ எம் சரவணன்
August 18, 2025, 11:35 am
சிலாங்கூரின் சில மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும்: மெட் மலேசியா
August 18, 2025, 11:01 am
புக்கிட் காயு ஹித்தாம் எல்லை வழியாக நாட்டிற்குள் வர முயன்ற எட்டு வெளிநாட்டினருக்கு நுழைவு மறுக்கப்பட்டது
August 18, 2025, 10:53 am
ஜாரா கைரினாவின் மரணத்தை அரசியலுக்காகப் பயன்படுத்தாதீர்: பிரதமர் அன்வார் எச்சரிக்கை
August 17, 2025, 10:30 pm
தமிழ் மொழிக்கு இணையான மொழி ஏதும் இல்லை: முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் ஆ. ராசா
August 17, 2025, 7:02 pm