
செய்திகள் மலேசியா
போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் மீது 36 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன
பெட்டாலிங் ஜெயா:
பெர்லிஸிலுள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான RM826,481 மதிப்பிலான பணத்தை எடுக்க போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தற்காக அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் மீது 36 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நீதிபதி Suzana Hussin முன்னிலையில் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டப் பின் குற்றம் சாட்டப்பட்ட 40 வயதான Mohd Fairuz Al-Fatah Badarudin கோலாலம்பூர் ஷெஷன்ஸ் நீதிமன்றத்தில் தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி முதல் 2023-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் கோலாலம்பூர், ஜாலான் ராஜா சூலானில் அமைந்துள்ள ஒரு வங்கியில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகக் அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 468 இன் கீழ் இந்த வழக்கு விசாரணை நடத்தப்படுகிறது.
குற்றம் நிருப்பிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
முன்னதாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அரசு துணை வழக்கறிஞர் Ahmad Fariz Abdul Hamid ஒரு உத்தரவாதத்துடன் RM100,000 ஜாமீன் வழங்கினார்.
குற்றம் சாட்டப்பட்டவர் குறைந்த வருமானம் பெறுவதால் அவருக்கான ஜாமின் தொகையை 10,000 ரிங்கிட்டிற்கு குறைக்கும்படி தேசிய சட்ட உதவி அறக்கட்டளையின் வழக்கறிஞர் ஜி. சிவஜோதி பிள்ளை கோரினார்.
இறுதியில் நீதிபதி Suzana Hussin RM15,000-க்கு ஜாமீனில் விடுவிக்க அனுமதித்தார்.
இந்த வழக்கு விசாரணை ஜூலை 17-ஆம் தேதி மீண்டும் செவிமடுக்கப்படும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 10:56 am
மலேசிய தமிழ் திரைப்படம் ‘மிருகசிரிஷம்’ பாக்ஸ் ஆபிஸில் தடுமாறுகிறது: தயாரிப்பாளர் வருத்தம்
June 21, 2025, 10:39 am
ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க தூதரகத்தின் முன் நூற்றுக்கணக்கானோர் கூடி முழக்கம்
June 21, 2025, 9:31 am
பிரதமரின் நம்பிக்கை குறைந்ததை உணர்ந்தவுடன் பதவியை விலகினேன்: ரஃபிஸி ரம்லி
June 20, 2025, 11:04 pm
1,000 மடானி பள்ளிகள் தத்தெடுப்புத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
June 20, 2025, 11:02 pm
மீண்டும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: கிள்ளான் மேருவில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
June 20, 2025, 11:01 pm