
செய்திகள் மலேசியா
ஈப்போ ராஜா பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனையில் இரத்த கையிருப்புக்கு தட்டுப்பாடா ? பொய்யான தகவல்களைப் பரப்ப வேண்டாம்
ஈப்போ:
ஈப்போ ராஜா பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனையில் இரத்த கையிருப்புக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கைகளையும் இதுவரை வெளியிடவில்லை என்று சொல்லப்படுகிறது.
மேலும், இதுபோன்ற ஆதாரமற்ற அல்லது போலி செய்திகளை பொறுப்பற்ற நபர்கள் பரப்பி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று பேராக் மாநில தகவல் தொடர்பு, பல்லூடக & அரசு சாரா செயற்குழுவின் தலைவர் முஹம்மத் அஸ்லான் ஹெல்மி நினைவுறுத்தினார்.
கிரிக் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க HRPB மருத்துவமனையில் சிலர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு இரத்த கையிருப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாங்கள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அஸ்லான் சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 10:56 am
மலேசிய தமிழ் திரைப்படம் ‘மிருகசிரிஷம்’ பாக்ஸ் ஆபிஸில் தடுமாறுகிறது: தயாரிப்பாளர் வருத்தம்
June 21, 2025, 10:39 am
ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க தூதரகத்தின் முன் நூற்றுக்கணக்கானோர் கூடி முழக்கம்
June 21, 2025, 9:31 am
பிரதமரின் நம்பிக்கை குறைந்ததை உணர்ந்தவுடன் பதவியை விலகினேன்: ரஃபிஸி ரம்லி
June 20, 2025, 11:04 pm
1,000 மடானி பள்ளிகள் தத்தெடுப்புத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
June 20, 2025, 11:02 pm
மீண்டும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: கிள்ளான் மேருவில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
June 20, 2025, 11:01 pm
புதிய கட்டண விலை பட்டியலில் மின்சாரக் கட்டணம் மிகவும் வெளிப்படையாக இருக்கும்: எரிசக்தி ஆணையம்
June 20, 2025, 5:47 pm