
செய்திகள் மலேசியா
நஜிப்பிற்கு எதிரான மூன்று பணமோசடி குற்றச்சாட்டுகளின் வழக்கு விசாரணை தொடரும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர்:
SRC இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிதி தொடர்பான மூன்று பணமோசடி குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரிய முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் விண்ணப்பத்தை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி நஜிப் அனுப்பிய விண்ணப்பத்தைச் சட்டத்துறை அலுவலகம் நிராகரித்ததாக அரசு துணை வழக்கறிஞர் Ashrof Adrin Kamarul இன்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
நஜிப்பிற்கு எதிரான மூன்று பணமோசடி குற்றச்சாட்டுகளின் வழக்கு விசாரணையை அரசு தரப்பு தொடரும் என்று Ashrof Adrin Kamarul கூறினார்.
முன்னதாக, 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி தன்னுடய மூன்று AmIslamic வங்கி கணக்குகளில் சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து மொத்தம் RM27 மில்லியன் பணத்தைப் பெற்றதற்காக நஜிப் மீது 3 பணமோசடி குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.
தனக்கெதிரான குற்றச்சாட்டை நஜிப் மறுத்து விசாரணை கோரினார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நிதிச் சட்டம் 2001 இன் பிரிவு 4(1)(a) இன் கீழ் விசாரிக்கப்படுகின்றன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது RM5 மில்லியன் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 10:56 am
மலேசிய தமிழ் திரைப்படம் ‘மிருகசிரிஷம்’ பாக்ஸ் ஆபிஸில் தடுமாறுகிறது: தயாரிப்பாளர் வருத்தம்
June 21, 2025, 10:39 am
ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க தூதரகத்தின் முன் நூற்றுக்கணக்கானோர் கூடி முழக்கம்
June 21, 2025, 9:31 am
பிரதமரின் நம்பிக்கை குறைந்ததை உணர்ந்தவுடன் பதவியை விலகினேன்: ரஃபிஸி ரம்லி
June 20, 2025, 11:04 pm
1,000 மடானி பள்ளிகள் தத்தெடுப்புத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
June 20, 2025, 11:02 pm
மீண்டும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: கிள்ளான் மேருவில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
June 20, 2025, 11:01 pm
புதிய கட்டண விலை பட்டியலில் மின்சாரக் கட்டணம் மிகவும் வெளிப்படையாக இருக்கும்: எரிசக்தி ஆணையம்
June 20, 2025, 5:47 pm