
செய்திகள் இந்தியா
மும்பை கூட்டநெரிசலில் 4 ரயில் பயணிகள் விழுந்து சாவு
மும்பை:
மும்பையில் கூட்ட நெரிசலுடன் சென்ற இரு ரயில்களின் படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்ற பயணிகள் மோதி கீழே விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் ரயில் காவலரும் ஆவார். ஒரு குறுகிய வளைவில் இரு ரயில்களும் வேகமாக கடந்து சென்றபோது படிக்கட்டில் தொங்கிய பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் மோதி கீழே விழந்தனர். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படிக்கட்டில் தொங்கிய ஒரு பயணி அணிந்திருந்த பை, எதிரே வந்த ரயிலின் பயணிகள் மீது தட்டியதே இந்த விபத்துக்கு காரணம் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து மும்பை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவு வசதியை ஏற்படுத்த உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 11:39 am
ஆடவரை கடித்ததும் பாம்புதான்... இறந்தது பாம்புதான் : அதிசயம் ஆனால் உண்மை
June 20, 2025, 6:03 pm
"ஆங்கிலம் என்பது வெட்கக்கேடு அல்ல... அதிகாரம்”: அமீத்ஷாவிற்கு ராகுல் காந்தி பதில்
June 20, 2025, 5:57 pm
ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் வரும்: அமித் ஷா
June 20, 2025, 4:20 pm
கூட்டங்களை கையாள புதிய சட்டம்
June 19, 2025, 7:26 pm
ரூ.3,000-க்கு 200 முறை டோல் கேட்டை கடக்க புதிய பாஸ்டேக்
June 19, 2025, 2:56 pm
ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப்பெட்டி: ஆய்வுக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகிறது
June 19, 2025, 12:11 pm
ஈரானிலிருந்து முதல்கட்டமாக 110 இந்திய மாணவர்கள் தில்லி வந்து சேர்ந்தனர்
June 18, 2025, 9:43 pm