
செய்திகள் உலகம்
கள்ளக்குடியேற்ற ஆர்ப்பட்டக்காரர்களை அடக்க ராணுவ வீரர்களை அனுப்பிய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்
லாஸ் ஏஞ்சலிஸ்:
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்குச் சுமார் 700 ராணுவ வீரர்களை அனுப்ப அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
லாஸ் ஏஞ்சலிஸ் வீதிகளில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களைக் கட்டுக்குள் கொண்டுவர அந்த கடும் உத்தரவை அவர் பிறப்பித்தார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் குடியேறிகளை வெளியேற்ற டிரம்ப் அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதை எதிர்த்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன .
தேசிய ராணுவ வீரர்களைச் சொந்த மண்ணில் குடிமக்களுக்கு எதிராக அனுப்பவது அபத்தமானது என்று கலிபோர்னியா ஆளுநர் கெவின் நியூசம் ட்ரம்பின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்கு அனுப்பப்பட்டுள்ள மாநில ராணுவப் படையினரின் எண்ணிக்கையை இருமடங்காக்கப்போவதாக டிரம்ப் கூறியுள்ளார்.
ஏற்கனவே அங்கு அனுப்பப்பட்டுள்ள ஈராயிரம் வீரர்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்கப்படவில்லை.
அதனால் அதில் சிறு பங்கு வீரர்களே கூட்டத்தைக் கையாள்வதாகவும் மற்றவர்கள் அரசாங்கக் கட்டடங்களில் வேலையின்றி இருப்பதாகவும் நியூசம் தெரிவித்தார்.
இதற்கிடையே டிரம்ப் மீது கலிபோர்னியா மாநிலம் வழக்குத் தொடுத்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து 3 நாட்களாக ஆர்ப்பட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. கூட்டத்தை கலைக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அமெரிக்காவில் சுமார் 1.20 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அதிக பட்சமாக மெக்ஸிகோவை சேர்ந்த 40 லட்சம் பேர் அங்கு சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். இந்தியாவை சேர்ந்த 7.25 லட்சம் பேர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 11:43 am
இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல்: கொத்து குண்டுகளை வீசியதால் பெரும் சேதம்
June 21, 2025, 11:16 am
ஜப்பானில் அரிசி விலை இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரிப்பு
June 20, 2025, 4:13 pm
அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை
June 20, 2025, 11:07 am
ஈரான் அதன் புரட்சிகர பாதுகாப்பு உளவுத்துறைக்கான புதிய தலைவரை நியமித்துள்ளது
June 19, 2025, 5:18 pm
தாய்லாந்து பிரதமரின் தொலைபேசி அழைப்பு கசிவால் ஆட்சி மாற்றமா?
June 19, 2025, 4:18 pm
ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் வெடித்துச் சிதறியது
June 19, 2025, 4:15 pm