
செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் பணிபுரியும் பணிப்பெண்களுக்கு தட்டம்மை தடுப்பூசி கட்டாயம்
சிங்கப்பூர்:
7 வயதுக்குக் குறைந்த பிள்ளை உள்ள வீடுகளில் வேலைசெய்யும் வெளிநாட்டுப் பணிப்பெண்கள் measles எனப்படும் தட்டம்மைக்கு எதிராகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பதை முதலாளிகள் உறுதிசெய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது..
அது செப்டம்பர் ஒன்று முதல் நடப்பிற்கு வரும் என்று சிங்கப்பூர் மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
வீட்டில் உள்ள பிள்ளைக்கு முழுமையாகத் தட்டம்மைத் தடுப்பூசி போடப்படவில்லை என்றால் பணிப்பெண் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது அவசியம் என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.
இளம் பிள்ளைகள் தட்டம்மை நோயால் கடுமையாகப் பாதிக்கப்படலாம்.
எனவே பொதுச் சுகாதார மீள்திறனை மேம்படுத்தவும் இளம் பிள்ளைகளைப் பாதுகாக்கவும் புதிய நடவடிக்கை அறிமுகம் செய்யப்பட்டதாய் அமைச்சு சொன்னது.
தட்டம்மை எளிதில் காற்று வழி பரவக்கூடியது.
சிங்கப்பூரில் அதற்கு எதிராகப் பலர் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தாலும் சில நேரங்களில் நோய்ப்பரவல் தலைதூக்கும் வாய்ப்புகள் உள்ளன.
எனவே வீட்டுப் பணிப்பெண்களுக்குத் தடுப்பூசி போடுவதால் இளம் பிள்ளைகளுக்கு நோய் தொற்றும் அபாயத்தைக் குறைக்கலாம்.
செப்டம்பர் 1 முதல்...
1) பணிப்பெண் தட்டம்மைத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டாரா அல்லது அதற்கான நோய் எதிர்ப்புச்சக்தி அவருக்கு உள்ளதா?
2) 7 வயதுக்குக்கீழ் உள்ள எல்லாப் பிள்ளைகளுக்கும் முழுமையாகத் தட்டம்மைத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா?
3) பணிப்பெண் தடுப்பூசியை இன்னும் போட்டுக்கொள்ளவில்லை, ஆனால் அதற்காகப் பதிந்துகொண்டுள்ளாரா?
விளம்பரம்
புதிய பணிப்பெண்ணுக்கான வேலை அனுமதியைப் பெறவோ தற்போது வேலை செய்யும் பணிப்பெண்ணின் வேலை அனுமதியைப் புதுப்பிக்கவோ முதலாளிகள் அந்த விவரங்களை அமைச்சிடம் தெரிவிக்க வேண்டும்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 11:43 am
இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல்: கொத்து குண்டுகளை வீசியதால் பெரும் சேதம்
June 21, 2025, 11:16 am
ஜப்பானில் அரிசி விலை இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரிப்பு
June 20, 2025, 4:13 pm
அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை
June 20, 2025, 11:07 am
ஈரான் அதன் புரட்சிகர பாதுகாப்பு உளவுத்துறைக்கான புதிய தலைவரை நியமித்துள்ளது
June 19, 2025, 5:18 pm
தாய்லாந்து பிரதமரின் தொலைபேசி அழைப்பு கசிவால் ஆட்சி மாற்றமா?
June 19, 2025, 4:18 pm
ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் வெடித்துச் சிதறியது
June 19, 2025, 4:15 pm