நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை பாதுகாப்பு விவகாரம்: நாளை அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும்

ஜார்ஜ் டவுன்: 

கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் (JRTB) பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் தொடர்பான விவகாரம் குறித்து நாளை அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் குறிப்பிட்டார். 

நேற்று 15 உயிர்களைப் பறித்த கோர விபத்து சம்பவத்தைத் தனது அமைச்சகம் தீவிரமாகக் கருதுவதாகவும் சாலையில் பாதுகாப்பை மேம்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் லோக் கூறினார். 

நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து தாம் கேள்வி எழுப்பவுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார். 

இதன் மூலம் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்டுவது குறித்து முடிவு செய்யலாம் என்று அவர் இன்று நடைபெற்ற CruiseWorld Malaysia 2025 நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். 

விபத்து நிகழ்ந்த இடத்தில் கூடுதலாகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு இன்னும் சில மின் விளக்குகளும் பொருத்தப்படுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக அந்தோணி கூறினார்.

இருப்பினும், சாலைப் பாதுகாப்பு அம்சத்திற்கு பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையே ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset