
செய்திகள் இந்தியா
அதிர்ச்சியில் முடிந்த தேனிலவு: கணவரை கூலி படை ஏவி கொலை செய்த மணமகள்
புதுடில்லி:
தேனிலவு சென்ற போது கணவரை கூலி படை ஏவி மனைவி கொலை செய்த சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ராஜா ரகுவன்ஷி என்பவர் கடந்த மாதம் சோனம் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
தொடர்ந்து அவர் மனையுடன் மேகாலயா பகுதிக்கு தேனிலவு சென்றுள்ளனர். அதன் பின்னர் இருவரும் கடந்த மே 23ஆம் தேதி காணவில்லை என்று போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தொடர்ந்து இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதன் விளைவாக ராஜா ரகுவன்ஷியின் உடல் கடந்த ஜூன் 2ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அந்த தேடுதலில் ஒரு கத்தியும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக கொலை என்று யூகிக்க தொடங்கிய போலிசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்த நிலையில் உயிரிழந்தவரின் மனைவி சோனம் நேற்று பெற்றோரிடம் தனது இருப்பிடம் குறித்து கூறியுள்ளார்.
இந்த தகவலை சோனமின் பெற்றோர் போலிசாருக்கு தெரிவிக்க, காஜிபூர் அருகே உள்ள தாபாவில் சோனமை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து சோனமிடம் போலிசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதன்படி சோனம், விருப்பமின்றி ராஜா ரகுவன்ஷியை திருமணம் செய்துகொண்டு, தனது அப்பாவின் கடையில் வேலை செய்யும் ராஜ் குஷாலா என்பவருடன் நீண்ட காலம் பழகி வந்துள்ளார்.
இதையடுத்து சோனம் தனது கணவரை தனியாக அழைத்து சென்று ராஜ் குஷாலா உதவியுடன் சிலரை சேர்த்துக்கொண்டு கணவரை கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக ராஜ் குஷாலா உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூலி படை ஏவி கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am