நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆப்பிள் கணினி வடிவமைப்பாளர் பில் அட்கின்சன் காலமானார் 

சான் பிரான்சிஸ்கோ: 

ஆப்பிள் நிறுவனத்தின் கணினி வடிவமைப்பாளரான பில் அட்கின்சன் காலமானார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது மறைவை அவரின் குடும்ப உறுப்பினர் உறுதி செய்துள்ளார். கடந்த வியாழக்கிழமை அன்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள அவரது வீட்டில் அவர் காலமானார்.

“பில் அட்கின்சனின் மறைவால் நாங்கள் மிகுந்த வருத்தமடைந்துள்ளோம். அவர் ஓர் உண்மையான தொலைநோக்கு பார்வையாளராக இருந்தார். அவரது படைப்பாற்றல் என்றென்றும் போற்றப்படும். அவர் மேற்கொண்ட பணிகள் நம்மை ஊக்குவிக்கும்” என எக்ஸ் தளத்தில் டிம் குக் ட்வீட் செய்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset