நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

“எனது கை முறிந்தாலும், நான் தேர்தல் போட்டியை தொடருவேன்”: முன்னாள் கடற்படை வீரர் பிரையன் மெக்கினிஸ்

வாஷிங்டன்: 

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலை எதிர்த்து முன்னாள் கடற்படை வீரர் பிரையன் மெக்கினிஸ், அமெரிக்க செனட் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தை தொடருவதாக தெரிவித்துள்ளார். 

44 வயதுடைய மெக்கின்னிஸ், வட கரோலினா மாநிலத்தில் பசுமைக் கூட்டணியின் சார்பில் போட்டியிடுகிறார். புதன்கிழமை கெபிட்டல் கட்டிடத்தில் நடைபெற்ற ஆயுத சேவை துணைக் குழு விசாரணை கூட்டத்தின் போது போலிசாருடன் ஏற்பட்ட மோதலில் அவரது கை முறிந்தது.

அந்த நேரத்தில், “இந்த போருக்குக் காரணம் இஸ்ரேல்; இஸ்ரேலுக்காக அமெரிக்கா போர் செய்ய வேண்டாம்” என்று அவர் முழக்கமிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் காணொலியில், போலிசாரும், குடியரசுக் கட்சி செனட்டருமான டிம் ஷீஹியும் அவரை வெளியேற்ற முயன்றபோது கதவு மூலையில் அவரது கை சிக்கிய சம்பவம் அதில் காணப்பட்டது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு மெக்கின்னிஸுக்கு போலிசாரை தாக்குதல், கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தல், சட்டவிரோத போராட்டத்தில் தடங்கல் ஏற்படுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

எனினும், “என் நம்பிக்கைக்காக போராடியதால், எனது கை முறிந்தாலும், நான் தேர்தல் போட்டியை தொடருவேன்” என்று அவர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset