செய்திகள் உலகம்
ஈரானின் முன்னாள் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நெஜாத் உயிருடன் இருப்பது உறுதியாகும்
டெஹ்ரான்:
ஈரானின் முன்னாள் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநெஜாத் (69) உயிரிழந்ததாக வெளியான தகவல்கள் தவறானவை என்றும், அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு நெருக்கமான தரப்புகளை மேற்கோள் காட்டிய செய்தி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த வார இறுதியில் டெஹ்ரானில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக முன்பு செய்திகள் வெளியானது.
ஆனால் அந்த தாக்குதல் நேரத்தில் அஹ்மதிநெஜாத் சம்பவ இடத்தில் இல்லை என்றும், அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அந்த தாக்குதலில் அவரது மூன்று தனிப்படை பாதுகாவலர்கள் உயிரிழந்தனர். தாக்குதல் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள பகுதியை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அவரது தனிப்பட்ட இல்லத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. தாக்குதல் நடந்த இடம் அவரது இல்லத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு கட்டிடம் எனவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, அஹ்மதிநெஜாத் உயிரிழந்ததாக பரவிய வதந்திகளை அவரது குடும்பத்தினரும் மறுத்துள்ளனர்.
2005 முதல் 2013 வரை இரண்டு காலகட்டங்களில் ஈரானின் அதிபராக பணியாற்றிய அஹ்மதிநெஜாத், அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 6, 2026, 12:53 pm
அரசு அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்த மலேசிய ஆடவர் கைது
March 6, 2026, 12:51 pm
5 முதியவர்களைக் கொன்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனர்: போலிஸ் விசாரணை தீவிரம்
March 6, 2026, 11:39 am
ஈரான் தாக்குதலில் இந்தியா தொடர்பு?: அமெரிக்க கடற்படை குற்றச்சாட்டுக்கு நியூ டெல்லி விளக்கம்
March 6, 2026, 10:06 am
அமெரிக்க விமானத் தாங்கிக் கப்பலைத் தாக்கியதாக ஈரான் குற்றச்சாட்டு
March 6, 2026, 6:58 am
இரவு முழுவதும் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியது ஈரான்: இஸ்ரேல் முழுவதும் சைரன் ஒலிகள்
March 5, 2026, 5:43 pm
