
செய்திகள் உலகம்
சிங்கப்பூர் சிவன் ஆலயத்தின் குடமுழுக்கு விழாவில் கடும் நெரிசல்
சிங்கப்பூர்:
ஸ்ரீ சிவன் ஆலயத்தின் குடமுழுக்கு விழாவில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கோயிலுக்குள் நுழைய முற்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததால், அங்குக் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்தது.
தேவைப்பட்டவர்களுக்கு உதவி வழங்கப்பட்டதாகவும், யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்றும் வாரியம் தெரிவித்தது.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரக் கூடுதலான தொண்டூழியர்கள் அனுப்பப்பட்டதாகவும் காவல்துறையினர் உதவியதாகவும் அது கூறியது.
20,000க்கும் அதிகமானோர் கலந்துகொண்ட அந்த நிகழ்வு சிறப்பாக நடந்தேறியதாக வாரியம் சொன்னது.
கூட்டக் கட்டுப்பாட்டு நடைமுறைகளை மேம்படுத்துவதில் கடப்பாடு கொண்டுள்ளதாக அது தெரிவித்தது.
அதிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொண்டு, அடுத்த பெரிய அளவிலான நிகழ்ச்சிகளில் பக்தர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் வலுப்படுத்தப்படும் என்று வாரியம் கூறியது மீடியா கார்ப் ஊடகம் தெரிவித்துள்ளது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 11:43 am
இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல்: கொத்து குண்டுகளை வீசியதால் பெரும் சேதம்
June 21, 2025, 11:16 am
ஜப்பானில் அரிசி விலை இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரிப்பு
June 20, 2025, 4:13 pm
அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை
June 20, 2025, 11:07 am
ஈரான் அதன் புரட்சிகர பாதுகாப்பு உளவுத்துறைக்கான புதிய தலைவரை நியமித்துள்ளது
June 19, 2025, 5:18 pm
தாய்லாந்து பிரதமரின் தொலைபேசி அழைப்பு கசிவால் ஆட்சி மாற்றமா?
June 19, 2025, 4:18 pm
ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் வெடித்துச் சிதறியது
June 19, 2025, 4:15 pm