
செய்திகள் இந்தியா
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்தை நீதிபதி குன்ஹா விசாரிக்கிறார்
பெங்களூரு:
ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்ட நிகழச்சி கூட்ட நெரிசலில் சிக்கி தமிழக பெண் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா விசாரிக்க உள்ளார்.
அவரது தலைமையில் நீதி ஆணையத்தை நியமதித்து முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.
இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறைக்கு செல்ல தண்டனை வழங்கி தீர்ப்பளித்தவராவார்.
மேலும், ஆர்சிபி அணி, அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நிறுவனம், கர்நாடக கிரிக்கெட் வாரியம் சங்கம் ஆகியவற்றின் மீது பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடமையை சரியாக செய்யவில்லை என்று பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பி.தயானந்தா, கூடுதல் ஆணையர் விகாஷ் குமார், மத்திய மண்டல துணை ஆணையர் சேகர்.எச், உதவி ஆணையர் பாலகிருஷ்ணா ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am