
செய்திகள் இந்தியா
அயோத்தி ராமர் பிரசாதம் பெயரில் பல கோடி மோசடி
புது டெல்லி:
அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை பிரசாதம் எனக் கூறி இணையதளத்தில் 6 லட்சத்து 30,695 பக்தர்களிடம் 3 கோடியே 85 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை செய்த பிறகு சுவாமி பிரசாதம் கிடைக்கவில்லை காவல் நிலையங்களுக்கு புகார்கள் வந்தன. இதுதொடர்பாக விசாரித்த போலீஸார் போலி இணையதளம் உருவாக்கி, ராமர் கோயில் பிரசாதம் அனுப்புவதாக விளம்பரப்படுத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
காஜியாபாத்தை சேர்ந்த ஆசிஷ் என்பவர் போலி இணையதளத்தை உருவாக்கி ராமர் கோயில் பிரசாதம் இந்தியாவில் ரூ.51, வெளிநாட்டவர்களுக்கு 11 டாலர் கட்டணம் வசூலித்துள்ளார்.
அப்படி 6 லட்சத்து 30,695 பக்தர்களிடம் 3 கோடியே 85 லட்சம் ரூபாயை ஏமாற்றி வசூலித்துள்ளார்.
போலீஸார் அவரை கைது செய்தனர். இணையதள பிரசாத விளம்பரங்களின் நம்பகத்தன்மையை மக்கள் சரிபார்க்க வேண்டும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 11:39 am
ஆடவரை கடித்ததும் பாம்புதான்... இறந்தது பாம்புதான் : அதிசயம் ஆனால் உண்மை
June 20, 2025, 6:03 pm
"ஆங்கிலம் என்பது வெட்கக்கேடு அல்ல... அதிகாரம்”: அமீத்ஷாவிற்கு ராகுல் காந்தி பதில்
June 20, 2025, 5:57 pm
ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் வரும்: அமித் ஷா
June 20, 2025, 4:20 pm
கூட்டங்களை கையாள புதிய சட்டம்
June 19, 2025, 7:26 pm
ரூ.3,000-க்கு 200 முறை டோல் கேட்டை கடக்க புதிய பாஸ்டேக்
June 19, 2025, 2:56 pm
ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப்பெட்டி: ஆய்வுக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகிறது
June 19, 2025, 12:11 pm
ஈரானிலிருந்து முதல்கட்டமாக 110 இந்திய மாணவர்கள் தில்லி வந்து சேர்ந்தனர்
June 18, 2025, 9:43 pm