
செய்திகள் சிந்தனைகள்
அந்தக் கல்லை பத்திரமாக திருப்பி அனுப்பிய மலேசியப் புனிதப் பயணி - வெள்ளிச் சிந்தனை
சென்ற வருடம் ஹஜ்ஜுக்குச் சென்ற மலேசிய யாத்ரீகர் ஒருவர், ஊருக்குத் திரும்பியதும், ஜமராத்தில் எறிவதற்காக எடுக்கப்பட்ட ஒரு கல் தமது பையில் இருப்பதைக் கண்டார். திகைத்தார். உடனே அதை முஸ்தலிஃபாவுக்குத் திருப்பி அனுப்ப முடிவெடுத்தார்.
அந்தக் கல்லை சுத்தம் செய்து, வாசனைத் திரவியம் பூசி, ஒரு சிறிய கண்ணாடிப் பெட்டியில் வைத்தார்.
பின்னர் மக்காவின் தபால் நிலைய அதிகாரியின் முகவரிக்கு அதை அனுப்பி, கூடவே ஒரு கடிதம் எழுதி, அத்துடன் 10 ரியாலையும் அனுப்பிக் கொடுத்தார்.
"ஏதேனும் ஒரு டாக்ஸி டிரைவரை ஏற்பாடு செய்து, அந்தக் கல்லை முஸ்தலிஃபாவில் கொண்டு போடுமாறும், அந்தப் பணத்தை அந்த டாக்ஸி டிரைவருக்குக் கொடுக்குமாறும்” அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
கடிதத்தைப் பெற்றுக்கொண்ட தபால் நிலைய தலைமை அதிகாரி அப்துல் முஹ்ஸின் இப்னு சல்மிக்கு, இப்படியுமா மனிதர்கள் இருப்பார்கள் என்று ஆச்சரியம்.
அந்தக் கல்லை முஸ்தலிஃபாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டு, மலேசிய அன்பருக்கு நன்றிக் கடிதம் எழுதி, அந்த 10 ரியாலையும் திருப்பி அனுப்பினார். கூடவே ஒரு குர்ஆன் பிரதியையும் ஒரு துதி மாலையையும் (தஸ்பீஹ்) அன்பளிப்பாக அனுப்பினார்.
புனித இடங்களின் கல்லையோ மண்ணையோ வெளியே எடுத்துச் செல்வது குறித்து ஷரீஅத்தில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.
இந்தப் பிரச்சினையில் சட்டத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும்...
அந்தப் புனிதப் பயணி அல்லாஹ்வின் சின்னங்களை எவ்வாறு மதித்தார் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.
தமது சிறு அலட்சியத்தால் ஹஜ்ஜுக்கான வெகுமதி கிடைக்காமல் போய்விடக் கூடாதே என்பதில் அவர் எவ்வளவு கவனமாக இருந்துள்ளார்!
அவ்வாறெனில், எந்தக் குறையும் வைக்காமல், எந்தத் தவறும் நேர்ந்துவிடாமல் தமது ஹஜ்ஜுக் கடமையை அவர் எவ்வளவு கவனமுடன் நிறைவேற்றி இருப்பார்!
வேண்டுமென்றே அந்தக் கல்லை அவர் எடுத்துச் செல்லவில்லை. ஆயினும் அதைத் திருப்பி அனுப்புவதில் அவர் எவ்வளவு அக்கறை செலுத்துகிறார்.
பலர் இதை ஓர் அற்பமானதாகக் கருதினாலும், அவர் எதைக் கற்றுக்கொண்டாரோ அதன்படி செயல்பட்டார்.
இத்தகைய உயிரோட்டத்துடன் தொழுகை, ஹஜ் போன்ற வழிபாடுகளை நிறைவேற்றினால் அதன் தாக்கத்தை நமது ஆன்மா உணர்ந்துகொள்ளும்.
(டாக்டர் தாரிக் அஸ்ஸுவைதான் அவர்களின் முகநூல் பதிவு. புகைப்படத்துக்கும் பதிவுக்கும் தொடர்பில்லை)
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
June 13, 2025, 8:03 am
பேசத் தயங்கும் வலிமிகுந்த இதயங்கள் - வெள்ளிச் சிந்தனை
June 7, 2025, 6:42 am
தியாகமே திருநாளாய்... - ஹஜ் சிந்தனை
May 23, 2025, 8:06 am
ஹஜ் ஒரு மகத்தான பாக்கியம் - வெள்ளிச் சிந்தனை
May 5, 2025, 9:12 am
எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை - ஜென்னி மார்க்ஸ்: இன்று கார்ல் மார்க்ஸ் நினைவு நாள்
May 2, 2025, 8:08 am
இறையுதவி கிடைக்குமா கிடைக்காதா என ஏங்கித் தவிக்கும் தருணங்கள் - வெள்ளிச் சிந்தனை
May 1, 2025, 6:28 am
உழைப்பு என்பது... உழைப்பாளர் தின சிந்தனை
April 25, 2025, 8:26 am
உழைப்பில் இனிமை கண்ட உத்தமர்கள்..! - வெள்ளிச் சிந்தனை
April 11, 2025, 7:14 am