
செய்திகள் இந்தியா
ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் 9 போர் விமானங்கள் அழிப்பு
புதுடெல்லி:
இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானுக்கு சொந்தமான 9 விமானங்கள் அழிக்கப்பட்டன என்று இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பல்வேறு பகுதிகளை இந்தியா தாக்கியது.
இதில் பாகிஸ்தானின் வான்வழி, தரைவழி ராணுவ சொத்துகளுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது.
வான்வழி தாக்குதல் நடவடிக்கைகளின்போது பாகிஸ்தான் விமானப் படைக்கு சொந்தமான 6 விமானங்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டன. மேலும், இரண்டு கண்காணிப்பு விமானங்கள் வானில் அழிக்கப்பட்டன.
சி-130 ஹெர்குலில் போக்குவரத்து விமானமும் குண்டு வீசி அழிக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானுக்கு சொந்தமான 9 விமானங்கள் அழிக்கப்பட்டன என்று தகவல்கள் தெரிவித்தன.
நான்கு நாள்கள் நடைபெற்ற சண்டையில் இந்தியாவின் போர் விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதை ராணுவ தலைமை தளபதி ஒப்புக்கொண்டார். ஆனால் எத்தனை வி்மானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பது உறுதி செய்யப்படவில்லை.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am