நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

டிரம்பிடம் மோடி சரண்: ராகுல்

புது டெல்லி: 

இந்தியா -பாகிஸ்தான் சண்டையின்போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்த உடனே பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்  என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.

1971-ஆம் இந்தியா - பாகிஸ்தான் போரின்போது அமெரிக்கா தனது 7ஆவது கடற்படைப் பிரிவை அனுப்பியபோதும், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அசைந்து கொடுக்கவில்லை என்றார் அவர்.

1971இல் அமெரிக்க அச்சுறுத்தலையும் மீறி பாகிஸ்தானை இரண்டாக உடைத்தது இந்தியா. இந்திரா காந்தி யாருக்கும் அடிபணியவில்லை. நான் நினைத்ததைச் செய்து காட்டுவேன் என்றார்.

பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் சுதந்திர காலகட்டத்தில் இருந்தே சரணாகதி கடிதங்களை எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. காங்கிரஸ் யாரிடமும் ஒருபோதும் சரணடைந்ததில்லை என்றார் ராகுல் காந்தி.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset