
செய்திகள் இந்தியா
பாஸ்போர்ட்டில் மனைவியின் பெயரை சேர்க்க, நீக்க புதிய முறை
புது டெல்லி:
இந்திய பாஸ்போர்ட்டில் மனைவியின் பெயரைச் சேர்க்க அல்லது நீக்க இணைப்புப் படிவம் ANNEXE J எனப்படும் புதிய முறையை இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
பாஸ்போர்ட் சேவா 2.0 திட்டத்தின் மூலம் டிஜிட்டல் வடிவத்தில் பாஸ்போர்ட்டில் சிப் இணைக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் உரிமையாளரின் பெயர், பாஸ்போர்ட் எண், பிறந்த தேதி, பயோமெட்ரிக் தகவல்கள் அதில் உள்ளன.
பாஸ்போர்ட்டில் மனைவியின் பெயரைச் சேர்க்க அல்லது நீக்க திருமணச் சான்றிதழ் அவசியமாக இருந்தது.
தற்போது இந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டு, திருமணச் சான்றிதழுக்குப் பதிலாக ANNEXE J எனும் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படிவத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர் மற்றும் அவரின் வாழ்க்கைத் துணைவரின் பெயர், முகவரி, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்ற அடையாள ஆவணங்களின் எண்கள் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். வாழ்க்கைத் துணைவருடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தையும் இணைக்க வேண்டும்.
பாஸ்போர்ட் சேவா வலைதளத்தில் ANNEXE J படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am