நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜூலை 1-ஆம் தேதி முதல் விஇபி வாகன நுழைவு அனுமதி முழுமையாக அமல்படுத்தப்படும்: போக்குவரத்து அமைச்சகம்

புத்ரா ஜெயா: 

சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்குள் நிலம் வழியாக நுழையும் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வாகன நுழைவு அனுமதி, விஇபி திட்டம் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.  

விஇபி நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்காத வெளிநாட்டு வாகனமோட்டிகளுக்கு ஜூலை 1-தேதி முதல் சாலைப் போக்குவரத்துத் துறை எச்சரிக்கை அறிக்கை அனுப்பும் என்றும் லோக் குறிப்பிட்டார். 

அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு 300 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படும் என்றார் லோக். 

தற்போது, ​​மோட்டார் சைக்களோட்டிகளுக்கு இந்த அனுமதியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டினார். 

இருப்பினும் அரசாங்கம் எதிர்காலத்தில் அதை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளது.

மலேசியர்கள் விஇபி நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் லோக் உறுதிப்படுத்தினார். 

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் அரசாங்கம் இத்திட்டதிற்கான அமலாக்க தேதியை நிர்ணயித்து செயல்படுத்துவதற்கு முன்பு அதை அறிவிக்கும் என்று லோக் கூறியிருந்தார். 

விஇபி வாகன நுழைவு அனுமதி திட்டம் கடந்தாண்டு அக்டோபர் 1-ஆம் தேதி நடைமுறைப்படுத்தயிருந்த நிலையில் பின்னொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை கூறியது.

RFID எனும் அடையாளப் பட்டையைப் பொருத்திக்கொள்ளும் காலத்தைப் பதிவு செய்ய வாகனஓட்டிகளுக்கு ஏற்பட்டுள்ள இடைஞ்சல் உட்பட 'பல்வேறு காரணங்களுக்காக' இந்த முறை ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. 

இருப்பினும், இன்னும் ‘விஇபி’  திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் தொடர்ந்து மலேசியாவுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் அமலாக்க நடைமுறை கட்டங்கட்டமாகச் செயல்படுத்தப்படும் என்றும் செப்டம்பர் 27-ஆம் ஆம் தேதி சாலைப் போக்குவரத்துத் துறை கூறியது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset