
செய்திகள் வணிகம்
டெஸ்லா இந்தியாவில் உற்பத்தி செய்ய முன்வரவில்லை: ஒன்றிய அரசு
புது டெல்லி:
எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் மின்சார கார்களை உற்பத்தி செய்ய விரும்பவில்லை ஆனால் விற்பனை செய்ய மட்டுமே விரும்புகிறது என்று ஒன்றிய கனரக தொழில்கள் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.
இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனையை தொடங்க எலான் மஸ்க் தீவிரமாக முயற்சித்து வருகிறார். இதுதொடர்பாக பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின்போதும் அவர் சந்தித்து ஆலோசித்திருந்தார்.
இந்தியாவில் மின்சார கார்கள் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான திட்டத்துக்கான வழிகாட்டுதல்களை அமைச்சர் குமாரசாமி வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் மின்சார கார்களை உற்பத்தி செய்வது தொடர்பாக ஒரு கூட்டத்தில் மட்டும் டெஸ்லா நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர். பின்னர் 2 கூட்டங்களுக்கு அவர்கள் வரவில்லை என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2025, 4:44 pm
இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
July 12, 2025, 2:16 pm
மும்பையில் அமைகிறது முதல் டெஸ்லா ஷோரூம்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm