
செய்திகள் இந்தியா
இந்தியாவில் புதிதாக 50 விமான நிலையங்கள்
புது டெல்லி:
இந்தியாவில் வரும் 5 ஆண்டுகளில் புதிதாக 50 விமான நிலையங்கள் உருவாக்கப்படும் என்று விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.
2014-இல் இந்தியாவில் 74 விமான நிலையங்கள் இருந்தன. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளன.
விமானங்களைப் பராமரிப்பது, பழுதுபார்ப்பது என இந்தியாவை உலகின் முக்கிய மையமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இதில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுடன் கைகோத்து செயல்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.
விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக வளர்ந்துவரும் நாடுகள் பட்டியலில் இந்தியா முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது என்றார் அமைச்சர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am