நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாடு முழுவதும் தியாகப் பெருநாளுக்காக 38,000 மாடுகள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சு

கோலாலம்பூர்:

இந்த ஆண்டு தியாகப் பெருநாள் பண்டிகைக்காக நாடு முழுவதும் மொத்தம் 38,804 மாடுகள், எருமைகள் வழங்கப்பட்டுள்ளன.

வேளாண்மை, உணவு பாதுகாப்பு அமைச்சு இதனை கூறியது.

நாடு முழுவதும் வரும் சனிக்கிழமை தியாகப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது.

இப்பெருநாளுக்காக இந்த மாடுகளும் எருமை மாடுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதே போன்று  30,167 ஆடுகள், செம்மறி ஆடுகளும் வழங்கப்பட்டுள்ளன.

பள்ளிவாசல்கள்,  சூராவ்கள், இறைச்சி கூடங்களின் தேவைகளை அடிப்படையாக கொண்டு இது கணிக்கிடப்பட்டுள்ளது.

மேலும் பண்டிகையின் போது நாடு முழுவதும் கால்நடை விநியோகம் போதுமானதாகவும் தேவையை பூர்த்தி செய்யக்கூடியதாகவும் இருக்கும் என்று அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset