நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாரா மரணத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் பாதுகாக்கப்பட மாட்டார்கள்: பிரதமர்

கோத்தா கினபாலு,:

மாணவி ஷாரா மரணத்தில் தொடர்புடைய எந்தவொரு குற்றவாளிகளும் பாதுகாக்கப்பட மாட்டார்கள்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

சமீபத்திய பகடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய  படிவம் 1 மாணவி ஷாரா மரணமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் உட்பட எந்தவொரு தரப்பினருக்கும் எந்த பாதுகாப்பும் வழங்கப்படாது.

இந்த முறையில் ஒரு மரணம் இலகுவாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றல்ல.

அதிகாரிகள் உடனடியாக முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

சமீபத்தில் ஷாரா மரணமடைந்த சம்பவத்தில் கல்வியமைச்சர் கடுமையாக சாடப்பட்டார்.

இந்த மரணம் ஒரு சாதாரண விஷயமல்ல. குண்டாசாங்கில் ஒரு ஏழை விவசாயியின் குழந்தை இறந்தால், கொலையாளியை கண்டுபிடிப்பது நமது கூட்டுப் பொறுப்பு.

யாரையும் குற்றம் சாட்டுவது நமது நோக்கம் அல்ல. ஆனால் குற்றவாளிகள் ஒருபோதும் தப்பக் கூடாது.

நான் நேரடியாக  போலிஸ்படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது காலித் இஸ்மாயில், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் ஆகியோரிடம் பேசினேன்.

முகமது காலித்  உடனடியாக விசாரணை நடத்தி, அனைத்து உண்மைகளையும் கண்டுபிடித்து அதைத் தீர்ப்போம் என்று கூறியதாக பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset