நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஸ்ரீ சரவணனின் கூற்று குறித்து கவலைப்படத் தேவையில்லை; அது அவரது தனிப்பட்ட கருத்து: ஜொஹாரி

ஜொகூர்பாரு:

மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணனின் கூற்று குறித்து கவலைப்படத் தேவையில்லை.

அது அவரது தனிப்பட்ட கருத்து என்று அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி இதனை கூறினார்.

டத்தோஸ்ரீ சரவணனின் அறிக்கை, தேசிய முன்னணியில் இருந்து கட்சியை வெளியேற்ற விரும்புவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

ஆனால் டத்தோஸ்ரீ சரவணனின் அறிக்கை அவரது தனிப்பட்ட கருத்தாகும்.

அது மஇகாவின் ஒட்டுமொத்த நிலைப்பாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

ஒரு தனிநபர் சில நேரங்களில் கோபம், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வெளியிடும் அறிக்கைகளை பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை.

தனிப்பட்ட ரீதியில் பல கருத்துகள் வெளியிடலாம்.

ஆனால் கட்சி என்று வரும் போது முடிவுகள் வேறு மாதிரி இருக்கும் என்று டத்தோஸ்ரீ ஜொஹாரி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset