நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாமான் கோத்தா செராஸ் ஸ்ரீ மகா மூண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்திற்கு நிலம் வழங்கிய சிலாங்கூர் அரசுக்கு நன்றி: டாக்டர் கனகசுந்தரம்

செராஸ்:

தாமான் கோத்தா செராஸில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ மகா மூண்டககண்ணி அம்மன் ஆலயத்திற்கு நிலம் வழங்கிய சிலாங்கூர் மாநில அரசுக்கு ஆலயத் தலைவர் டாக்டர் கனகசுந்தரம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இன்று ஆலயத்தில் 36 ஆம் ஆண்டு திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில் ஜீவா ஒன்பதாவது ஆண்டாக அன்னதானம் வழங்கினார்.

ஆலயத் திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

53 ஆண்டுகள்  வரலாறு கொண்ட இந்த ஆலயத்திற்கு நிலம் கிடைக்க நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்த கணபதி ராவ் பெரும் துணை புரிந்தார்.

காஜாங் கவுன்சிலர் தியாகராஜன், முன்னாள் செனட்டர் சந்திரமோகன் மற்றும் வசந்தகுமார் ஆகியோரும் நிலம் கிடைக்க உதவினர் என்று அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநில அரசு வழங்கிய நிலத்தில் இப்போது 15 லட்சம் வெள்ளியில் கோவில் கட்டப்பட்டு வருகிறது.

ஆலய திருப்பணி வெற்றி பெற பொதுமக்கள் நன்கொடை கொடுத்து உதவலாம் என்று அவர் சொன்னார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset