
செய்திகள் மலேசியா
அனைத்துலக மேடையில் மிளிரும் ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்
ஜொகூர்பாரு:
ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக மேடையில் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகின்றனர்.
கடந்த ஜூலை 29 முதல் 31 வரை இந்தோனேசி யாவின் பண்டூங் நகரத்தில் உள்ள UNIKOM-இல் நடைபெற்ற World Robotics & Computer Science Olympiad-இல் பங்கேற்று, மலேசியாவைச் சர்வதேச அளவில் பெருமைப்படுத்தினர்.
இந்தப் போட்டியில் இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தியா, தென் கொரியா, வங்காளதேசம், கஜகஸ்தான் ஆகிய 9 நாடுகளைச் சேர்ந்த 108 குழுக்கள் பங்கேற்றன.
இத்தனை நாடுகளுக்கிடையே சிறந்த மாணவர்களுடன் போட்டியிட்டபோதிலும், எங்கள் ரினி மாணவர்கள் தங்களின் படைப்பாற்றல், தொழில்நுட்ப அறிவு மற்றும் புத்திசாலித்தனத்தால் அனைவரது பாராட்டுகளையும் பெற்றனர்.
விருதுகள் பெற்ற ரினி குழுக்கள்
குழு 1: The Vision Superheroes IOT
வெள்ளி பதக்கம்
மாணவர்கள்: க. தாஸ்வின் ஸ்ரீ, ஹ. தருனிகா, ச. ஜான்வி, ஜெ. ஜெய் மித்ரன்
முனைவர்கள்: வீ. பவித்ரா, மு. திவ்யா
குழு 2: Sound Wave Alert System
தங்கப் பதக்கம் - IYSA சிறப்பு விருது
மாணவர்கள்: சு. சஞ்ஜீவன், கோ. ஷானு, சு. யஷிதா, க. கவிஷ், பி. அஸ்வின் ராவ்
முனைவர்: மா. ரேவதி
குழு 3: Eco Grow Seed Pot
தங்கப் பதக்கம்
மாணவர்கள்: பி. வர்ணிக்கா, க. பிரித்திக்கா, ஷொ. கீர்த்தனா தேவி, பா. ரேஷ்வின், ஜே. சஸ்வன்
முனைவர்: இரா. யோகேஸ்வரி
குழு 4: Microbial Alchemy
வெள்ளி பதக்கம்
மாணவர்: மு. ஜெயேஸ் ராம்
முனைவர்: இரா. யோகேஸ்வரி
மலேசியாவைச் சர்வதேச அரங்கில் பெருமையுடன் நம்முடைய இரு ஆசிரியைகளான பவித்ரா வீரபதி, திவ்யா முருகன் ஆகியோர் பிரதிநிதித்தனர்.
இவர்கள் சர்வதேச நீதிபதிகளாக பணியாற்றி, பள்ளிக்கே பெருமை சேர்த்தனர்.
இந்த மகத்தான சாதனைகளுக்குப் பின்னால், இப்பள்ளிப் புறப்பாடப் நடவடிக்கை ஆசிரியை மு. சந்திரமோகினி, மாணவர் வழிகாட்டி ஆசிரியர்கள் பவித்ரா, திவ்யா, யோகேஸ்வரி, ரேவதி ஆகியோருக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
முக்கியமாக பள்ளியின் தலைமை ஆசிரியை சு. தமிழ் செல்வி, துணைத் தலைமையாசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், ஶ்ரீ ஸ்டாய் பாலசுப்பிரமணியர் ஆலயம், நன்கொடையாளர்கள், அனைத்துப் பெற்றோர்களுக்கும் எங்கள் இதயப்பூர்வ நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இந்தச் சர்வதேச வெற்றி, எங்கள் மாணவர்களுக்கான இன்னும் பெரும் வாய்ப்புகளுக்கான தொடக்கமாக அமையட்டும் என பள்ளி நிர்வாகத்தினர் கூறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 3, 2025, 10:59 pm
தந்தை மகனைக் கொன்று புதைத்த சம்பவத்திற்கு விவாகரத்து உட்பட குடும்பப் பிரச்சினைகளே காரணம்: போலிஸ்
August 3, 2025, 2:04 pm
அனைத்து இனங்களின் நலன்களைப் பாதுகாப்பதில் மடானி அரசு உறுதியாக உள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்
August 3, 2025, 1:20 pm
ஷாரா மரணத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் பாதுகாக்கப்பட மாட்டார்கள்: பிரதமர்
August 3, 2025, 11:15 am
மூன்றுநாள் தொழில்துறை கல்வி முகாம்: 30ஆயிரம் ரிங்கிட் வழங்கினார் சிவநேசன்
August 3, 2025, 10:14 am