நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தந்தை மகனைக் கொன்று புதைத்த சம்பவத்திற்கு விவாகரத்து உட்பட குடும்பப் பிரச்சினைகளே காரணம்: போலிஸ்

சிரம்பான்:

தந்தை மகனைக் கொன்று புதைத்த சம்பவத்திற்கு விவாகரத்து உட்பட குடும்பப் பிரச்சினைகளே முக்கிய காரணம்.

நெகிரி செம்பிலான் மாநில போலிஸ் தலைவர் அஹ்மத் ஜாஃபிர் இதனை உறுதிப்படுத்தினார்.

கடந்த வாரம் ஜெம்பூல் ரொம்பினில் மரணமடைந்த தனது ஆறு வயது மகனின் உடலை தந்தை  புதைத்துள்ளார்.

மகனை கொலை செய்வதற்கு அழுத்தம், குழந்தைக்காக ஏற்பட்ட சண்டையைத் தவிர விவாகரத்து முக்கிய காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சந்தேக நபர் விவாகரத்து பெறும் பணியில் ஈடுபட்டுள்ளதால்,

இதுவரை வேறு எந்த நோக்கங்களையும் போலிசார் கண்டறியவில்லை.

விசாரணையின் முடிவுகளின்படி, சம்பவத்திற்கான காரணம் ஒரு குடும்பப் பிரச்சினையாகக் கருதப்படுகிறது.

அதாவது சந்தேக நபரும் அவரது மனைவியும் விவாகரத்து செய்து குழந்தைக்காக சண்டையிட்டுக் கொண்டுள்ளனர் என தெரிவந்துள்ளது.

மேலும் இந்த கொலை சம்பவம் ஜெம்பூலில் நடந்துள்ளது.

சந்தேக நபர் ஜெம்பூலில் உள்ள பகுதியை நன்கு அறிந்திருந்ததால் உடல் ரொம்பினில் புதைக்கப்பட்டது என விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset