
செய்திகள் மலேசியா
மத்தியஸ்தர்களை காட்டிலும் மக்கள் நேரடி உதவிகளை எதிர்பார்க்கின்றனர்; மித்ராவை மாற்றி அமையுங்கள்: டத்தோ லோகபாலா
கோலாலம்பூர்:
மத்தியஸ்தர்களை காட்டிலும் மக்கள் நேரடி உதவிகளை எதிர்பார்க்கின்றனர்.
அதனால் அரசாங்கம் மித்ராவை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும் என பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ லோகபாலா வலியுறுத்தினார்.
மித்ராவுக்கு ஒதுக்கப்படும் 100 மில்லியன் அதாவது பத்து கோடி வெள்ளி இந்திய சமுதாயத்திற்கு உதவும் வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
பத்து கோடி வெள்ளியில் 60 விழுக்காடு தொகை (6 கோடி) கல்வி , வீடு, வியாபாரம் துறைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையில் மித்ரா மூலம் நிதி வழங்கப்பட வேண்டும்.
தந்தை ஒருவர் இறந்து விட்டால் மாணவரின் கல்வி பாதிக்கப்படும்.
இந்த மாணவரின் கல்வி பாதிக்கப்படாமல் மித்ரா கைகொடுக்க வேண்டும்.
அதே போல் வியாபாரம் செய்யும் இந்தியர்களுக்கு உதவ மித்ரா உதவ வேண்டும்.
அரசு சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் நடத்தும் திட்டங்களுக்கு 40 விழுக்காடு தொகை ஒதுக்கப்பட வேண்டும்.
ஒரு திட்டத்தை மேற்கொள்ளும் நிறுவனத்திற்கு நான்கு லட்சம் வெள்ளி ஒதுக்கினால் அது சமுதாயத்திற்கு எந்த நன்மையும் இல்லை.
சமுதாயம் நன்மை பயக்கும் வகையில் மித்ரா நிதி சென்றடைய வேண்டும்.
பிபிபி கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 3, 2025, 2:04 pm
அனைத்து இனங்களின் நலன்களைப் பாதுகாப்பதில் மடானி அரசு உறுதியாக உள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்
August 3, 2025, 1:20 pm
ஷாரா மரணத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் பாதுகாக்கப்பட மாட்டார்கள்: பிரதமர்
August 3, 2025, 11:15 am
மூன்றுநாள் தொழில்துறை கல்வி முகாம்: 30ஆயிரம் ரிங்கிட் வழங்கினார் சிவநேசன்
August 3, 2025, 10:14 am
டத்தோஸ்ரீ சரவணனின் கூற்று குறித்து கவலைப்படத் தேவையில்லை; அது அவரது தனிப்பட்ட கருத்து: ஜொஹாரி
August 3, 2025, 10:10 am