நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மண்டை ஓட்டில் காயம்; ஒரு மாதம் கொடுமைக்கு இலக்கானதே 7 மாதக் குழந்தையின் மரணத்திற்கான காரணம்: போலிஸ்

கோலாலம்பூர்:

ஒரு மாதம் கொடுமைக்கு இலக்கானதே 7 மாதக் குழந்தையின் மரணத்திற்கான காரணம்.

குறிப்பாக குழந்தையின் மண்டை ஓட்டில் காயம் ஏற்பட்டுள்ளது என்று கோலாலம்பூர் போலிஸ் தலைவர் டத்தோ முகமது உசுப் ஜான் முகமது இதனை கூறினார்.

கடந்த புதன்கிழமை செராஸில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏழு மாதக் குழந்தையின் மரணமடைந்தது.

அக்குழந்தை கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியான கொடுமைக்கு இலக்காகி உள்ளது.

மேலும் பிரேத பரிசோதனை முடிவுகளில் கொடுமையால் குழந்தையின் உடல் முழுவதும் பல்வேறு காயங்கள் இருந்தன.

குறிப்பாக குழந்தையின்  மண்டை ஓடு உடைந்திருந்தது  என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் வளர்ப்புத் தாயான பெண்அனுபவித்த மன அழுத்தத்தின் விளைவாக இந்த துஷ்பிரயோகம் நிகழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கான காரணம் பாதிக்கப்பட்டவர் அடிக்கடி அழுவதால், அவரது வளர்ப்புத் தாய் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிட்டிருக்கலாம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset