
செய்திகள் இந்தியா
கழுகு மோதி விமானம் சேதம்: 175 பயணியர் உயிர் தப்பினர்
ராஞ்சி:
4,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தின் மீது கழுகு மோதியதால் ராஞ்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பீகாரின் பாட்னாவில் இருந்து மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நோக்கி, இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான பயணியர் விமானம் நேற்று புறப்பட்டது.
அதில், 175 பயணியர் இருந்தனர். ராஞ்சி அருகே, 4,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது கழுகு மோதியது.
இதனால் விமானத்தின் முன்புறத்தில் சேதம் ஏற்பட்டது. நிலைமையை உணர்ந்த விமானிகள், பயணியர் பாதுகாப்பு கருதி விமானத்தை உடனடியாக தரையிறக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து ராஞ்சி பிர்சா முண்டா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் பயணியருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என, இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am