நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கேரளாவுக்கு மறுப்பு: மகாராஷ்டிரா வெளிநாட்டு நிதி பெற ஒன்றிய அரசு அனுமதி

புது டெல்லி: 

மகாராஷ்டிர முதல்வர் நிவாரண நிதிக்கு வெளிநாட்டு நிதி பெறுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.

கேரள வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில் வெளிநாடு நிதிப் பெற அந்த மாநில அரசுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கவில்லை.

தற்போது இந்தியாவிலேயே முதல் முறையாக மகாராஷ்டிர அரசுக்கு மட்டும் வெளிநாட்டு நிதி பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்காக வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளம், வறட்சி, தீ விபத்துகள் போன்ற இயற்கை பேரிடர்களின்போது பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்கும் மகாராஷ்டிர மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு இந்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset