நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

20% ethanol கலக்கப்பட்ட பெட்ரோல் வாகனங்களுக்கு ஆபத்தானதா?: இந்திய அரசு விளக்கம்

புது டெல்லி: 

20% ethanol கலக்கப்பட்ட E20 பெட்ரோலை பயன்படுத்துவதால் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் விடியோக்கள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம்
தெரிவித்துள்ளது.

கரும்பு அல்லது மக்காச்சோளத்திலிருந்து எடுக்கப்படும் ethanol பெட்ரோலில் 20 சதவீதம் கலந்து பயன்படுத்தப்படுகிறது.

E20 பெட்ரோல், வாகனங்களின் மைலேஜ் தரும் என்பது தவறானது. E20 பெட்ரோல் சிறந்த உந்துசக்தியைத் தருவதுடன் E10 பெட்ரோலைவிட சுமார் 30 சதவீதம் குறைந்த கார்பன் உமிழ்வைக் கொடுக்கிறது.

E20 பெட்ரோல் திட்டத்தால் இந்த ஆண்டு மட்டும் விவசாயிகளுக்கு ரூ.40,000 கோடிக்கு மேல் பணம் கிடைக்கும், அந்நிய செலாவணி சேமிப்பு ரூ.43,000 கோடியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset